happy
Thursday, February 21, 2013
Friday, October 19, 2012
World Days in January 2012 | |
| 04 | World Braille Day 2012 |
World Days in March 2012 | |
| 07 | World Maths Day 2012 |
| 08 | International Womens Day 2012 |
| 22 | World Water Day 2012 |
| 24 | World Tuberculosis Day 2012 |
| 31 | Earth Hour 2012 |
World Days in August 2012 | |
| 12 | International Youth Day 2012 |
| 13 | International Left Handers Day 2012 |
Wednesday, October 17, 2012
நான் ரசித்த -கவிஞர் அறிவுமதி கவிதைகள்
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....
*******
நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ
*******
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்
*******
தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்
*******
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு
*******
பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு
*******
நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்
*******
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
*******
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....
*******
நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ
*******
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்
*******
தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்
*******
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு
*******
பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு
*******
நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்
*******
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
*******
என் கணவரும்
உன் துணைவியும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்
&&&&&&&&&&&&
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்
*********************
காதல் என் தாய்நாடு....!
காதல் இரு உயிரின் சுவாசம்..!
காதல் இருவரின் நான்கு கண்கள்....!
காதல் இறைவனின் பரிசு ..!
காதல் பைத்தியத்தின் மறு பிறவி...!
காதல் சோகத்தின் கீதம் ..!
காதல் வறுமையின் பசி ...!
காதல் ஏமாற்றத்தின் தாய் ...!
காதல் அச்சு இல்லாத வண்டி...!
காதல் முள் இல்லாத கடிகாரம் ...!
காதல் திசை மாறிய படகு ...!
காதல் மை இல்லாத பேனா...!
மொத்தத்தில் காதல் புரியாத புதிர்...!
காதலை அறிந்தவன் புத்திசாலி
காதலை அறியாதவன் திறமைசாலி
மகாலட்சுமி .பா
காதல் இரு உயிரின் சுவாசம்..!
காதல் இருவரின் நான்கு கண்கள்....!
காதல் இறைவனின் பரிசு ..!
காதல் பைத்தியத்தின் மறு பிறவி...!
காதல் சோகத்தின் கீதம் ..!
காதல் வறுமையின் பசி ...!
காதல் ஏமாற்றத்தின் தாய் ...!
காதல் அச்சு இல்லாத வண்டி...!
காதல் முள் இல்லாத கடிகாரம் ...!
காதல் திசை மாறிய படகு ...!
காதல் மை இல்லாத பேனா...!
மொத்தத்தில் காதல் புரியாத புதிர்...!
காதலை அறிந்தவன் புத்திசாலி
காதலை அறியாதவன் திறமைசாலி
மகாலட்சுமி .பா
Subscribe to:
Comments (Atom)


